Categories: வணிகம்

பங்குச்சந்தை முடிவு.! சென்செக்ஸ் 65,629 புள்ளிகளாக நிறைவு.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டிம், இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்களில் ஏற்றத்துடன் வர்த்தகமானது. ஆனால் மூன்றாவது நாளான புதன்கிழமை சரிவுடன் வர்த்தகமானது. ஏற்றமடையும் என்று முதலீட்டாளர்கள் நினைத்துக் கொண்டிருக்க, நான்காவது நாளாக இன்றும் பங்குச்சந்தை சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியது.

அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 65,484 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 247.78 புள்ளிகள் சரிந்து 65,629.24 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 46.40 புள்ளிகள் சரிந்து 19,624.70 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாளில் 66,473.74 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 551.07 புள்ளிகள் சரிந்து 65,877.02 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 140.40 புள்ளிகள் சரிந்து 19,671.10 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இவ்வாறு பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.31 டாலர் விலை குறைந்து 90.19 டாலராக விற்பனையாகி வருகிறது.

மேலும், சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 97.00 அல்லது 1.32 சதவீதம் குறைந்து ரூ.7,268 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

35 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

39 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago