பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 401 புள்ளிகள் உயர்ந்தது..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 401 புள்ளிகள் அதிகரித்து 60,056 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,743 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

கடந்த வாரத்தில் சரிவில் வர்த்தககமாகிவந்த பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 59,873 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை காலை நிலவரப்படி, பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 85 புள்ளிகள் என உயர்ந்து 59,740 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 17,649 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்றது.

தற்பொழுது, வர்த்தகநாளின் முடிவில் பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 401 புள்ளிகள் என உயர்ந்து 60,056 புள்ளிகளாக புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 119.35 புள்ளிகள் உயர்ந்து 17,743 புள்ளிகளாகவும் வர்த்தகம் முடிந்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,655 புள்ளிகளாகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,624 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

விப்ரோ லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் கம்பெனி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுசுகி இந்தியா, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ் லிமிடெட், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்