பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 311 புள்ளிகள் அதிகரித்தது..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 311 புள்ளிகள் அதிகரித்து 60,157 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,722 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 60,028 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 311 புள்ளிகள் அல்லது 0.52% என அதிகரித்து 60,157 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 98.25 புள்ளிகள் அல்லது 0.56% அதிகரித்து 17,722 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

கோடக் மஹிந்திரா வங்கி, டாடா ஸ்டீல், ஐடிசி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி  ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ லிமிடெட், டாடா மோட்டார்ஸ், லார்சன் & டூப்ரோ, டைட்டன் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

கோடக் மஹிந்திரா வங்கி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஐச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசுகி இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ்  ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ லிமிடெட், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், லார்சன் & டூப்ரோ, டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்