பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 235 புள்ளிகள் அதிகரித்தது..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 235 புள்ளிகள் அதிகரித்து 60,392 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,812 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 60,180 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 235 புள்ளிகள் அல்லது 0.39% என அதிகரித்து 60,392 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 90.10 புள்ளிகள் அல்லது 0.51% அதிகரித்து 17,812 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மஹிந்திரா, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, நெஸ்லே இந்தியா, என்டிபிசி லிமிடெட், அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி லிமிடெட், லார்சன் & டூப்ரோ, பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

திவி’ஸ் லேபரட்டரீஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர். ரெட்டிஸ் லேபரட்டரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஐஷர் மோட்டார்ஸ், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என்டிபிசி லிமிடெட், நெஸ்லே இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி லிமிடெட், லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்