பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 62,724 புள்ளிகளாக நிறைவு..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 99.08 புள்ளிகள் உயர்ந்து 62,724 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,601 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரங்களில் சரிவுடன் வர்த்தகமாகிவந்த இந்திய பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தக நாளில் 62,569 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 99.08 புள்ளிகள் அல்லது 0.16% என உயர்ந்து 62,724 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 38.10 புள்ளிகள் அல்லது 0.21% உயர்ந்து 18,601 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 62,625 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,607 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், என்டிபிசி லிமிடெட், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, டைட்டன் கம்பெனி, மாருதி சுசுகி இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.