Stock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு!
இன்றைய சென்செக்ஸ் 217.99 புள்ளிகள் சரிந்து, 37,922.48ஐ தொட்டுள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி, 67 புள்ளிகள் சரிந்து 11,148.45 ஆக உள்ளது.
கடந்த சில தினங்களாக நல்ல முன்னேற்றத்தை எட்டிய ஐடி மற்றும் வங்கித் துறையின் பங்குகள், தற்பொழுது பெருமளவு சரிந்துள்ளது. மேலும், மெட்டல் பங்குகளும் சரிந்தால், நிஃப்டியும் சரிந்துள்ளது.
சென்செக்ஸ் பங்குசந்தையில், அதிகபடியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள், 3.50% (ரூ.2132.70) ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக, சன் பார்மா நிறுவனத்தில் பங்கு விலை 3.46% உயர்ந்துள்ளது.
அதனை தொடர்ந்து, ஆக்சிஸ் பேங்க் பங்கு விலை 2.42% ஆகவும், ஹெச்டிஎஃப்சி 2.41%, டிசிஎஸ் 1.88%, ஹெச்டிஎஃப்சி பேங்க் 1.79%, எஸ்பிஐ 1.74%, ஏசியன் பெயிண்ட்ஸ், 1.63%, ஐசிஐசிஐ பேங்க் 1.61% சரிந்துள்ளது.
தேசிய பங்குசந்தையான நிஃப்டியில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 4.01% உயர்ந்தது. அதன்பின், சன் பார்மா நிறுவனத்தின் பங்குகள் 2.64% உயர்ந்துள்ளது.
அதனை தொடர்ந்து, ஆக்சிஸ் பேங்க் பங்குகள் 3.49% ஆகவும், ஹெச்டிஎஃப்சி 2.72%, ஹிண்டால்கோ 2.72%, ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் 2.36%, ஐசிஐசிஐ பேங்க் 2.18%, அதானி போர்ட்ஸ் 2.13%, பார்தி இன்ஃப்ராடெல் 2.12% யூபிஎல் 2.07%, டைடன் 2.07%, டிசிஎஸ் 2.01% சரிந்துள்ளது.
மேலும், டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு இன்று ரூ.0.9 உயர்ந்து, ரூ.74.93 ஆக உள்ளது.