Stock Market: கடும் சரிவில் இந்தியப் பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 700 புள்ளிகள் வீழ்ச்சி.!

sensex falls

விநாயகர் சதுர்த்தி விழாவானது நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், வர்த்தகங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இன்று விடுமுறை முடிந்த நிலையில், 67,080 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் காலை 10 மணியளவில், 453.91 புள்ளிகள் சரிந்து 67,142.93 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.

முந்தைய வாரங்களில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள், இந்த வார வர்த்தக நாளில் வீழ்ச்சியுடனே வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, இன்றும் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கிய சென்செக்ஸ், இப்போது 700 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி, 141.90 புள்ளிகள் சரிந்து 19,991.40 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. ஆனால் இப்போது 200 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இந்த வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வாரம் முதல் முறையாக நிஃப்டி 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தையானது வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது. இன்று இரவு அமெரிக்க மத்திய வங்கியின் கடன் வட்டி விகிதம் ஆனது அறிவிக்கப்படவுள்ளது. அந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் முதலீட்டார்கள் தங்களது பங்குகளில் மாறுபாடுகளை செய்கின்றனர்.

இதனால் ஒரே இரவில், அமெரிக்க குறியீடுகள் 0.3 சதவீதம் வரை சரிந்தன. அதோடு, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஆனது கடந்த மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து 93 டாலர் ஆக உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இத்தகைய காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மேலும், தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 636.41 புள்ளிகள் சரிந்து 66,960.43 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 178.10 புள்ளிகள் சரிந்து 19,955.20 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 67,596 புள்ளிகளாகவும், நிஃப்டி 20,133 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque