இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விடுமுறை நாளான இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை நாளாகும். எனவே இந்த நாளில் வர்த்தகங்கள் மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் ஏதும் நடைபெறாது.
2023 ஆம் ஆண்டில், மொத்தம் 15 பங்குச் சந்தை விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இன்னும் 6 விடுமுறைகள் மீதம் உள்ளன. அதன்படி, அடுத்த பங்குச் சந்தை விடுமுறை அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி ஜெயந்தி அன்று வருகிறது.
அதேபோல, அக்டோபர் 24ம் தேதி தசரா, நவம்பர் 14ம் தேதி தீபாவளி, நவம்பர் 27ம் தேதி குருநானக் ஜெயந்தி மற்றும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஆகிய ஐந்து பங்குச் சந்தை விடுமுறைகள் உள்ளன.
முன்னதாக, வாரத்தின் முதல் நாளான நேற்று 67,665 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 241.79 புள்ளிகள் சரிந்து 67,596.84 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 59.05 புள்ளிகள் உயர்ந்து 20,133.30 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 67,838 புள்ளிகளாகவும், நிஃப்டி 20,192 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முன்னதாக, 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…