பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 65,515 புள்ளிகளாக வர்த்தகம்..!
இன்றைய வர்த்தக நாளில் 65,810 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 331.23 புள்ளிகள் சரிந்து 65,515 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 83.10 புள்ளிகள் உயர்ந்து 19,487 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,846 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,570 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
மஹிந்திரா & மஹிந்திரா, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, டைட்டன் கம்பெனி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் லிமிடெட். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. எச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுஸுகி இந்தியா, ஐடிசி லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.