வணிகம்

பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 65,447 புள்ளிகளாக வர்த்தகம்..!

Published by
செந்தில்குமார்

இன்றைய வர்த்தக நாளில் 65,727 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 240.77 புள்ளிகள் சரிந்து 65,447 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 77.80 புள்ளிகள் சரிந்து 19,465 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,688 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,543 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.

எச்சிஎல் டெக்னாலஜிஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, மாருதி சுசுகி இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், என்டிபிசி லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

50 minutes ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

2 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

4 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

4 hours ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

5 hours ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

5 hours ago