இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 2 வாரங்களாக இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்தது. முந்தைய வர்த்தக நாளில் சென்செக்ஸ் 65,000 புள்ளிகளைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது. ஆனால், இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் சரிவில் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 65,493 புள்ளிகளாக தொடங்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 85.96 புள்ளிகள் அல்லது 0.13% சரிந்து 65,393 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 17.75 புள்ளிகள் அல்லது 0.092% சரிந்து 19,371 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,479 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,389 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. சென்செக்ஸ் குறியீடு 65 ஆயிரம் புள்ளிகளை தாண்டி வர்த்தகம் நடைபெற்று வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ள நிலையில், தற்பொழுது சரிவை சந்தித்துள்ளது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சந்தையில் முதலீடு செய்து வரும் வேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதங்களை விட மே மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நார்வேயின் கார்ல்சன் மற்றும் ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகிய…
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…