இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இடையிடையே அவ்வப்போது ஏற்றமடைந்து இருந்தாலும் இந்த சரிவினால் ஏற்பட்ட நஷ்டமே அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் இரண்டாவது வர்த்தக நாளிலும் பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி, 65,021.29 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 219.39 புள்ளிகள் சரிந்து, 64,739.30 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 59.30 புள்ளிகள் சரிந்து 19,352.45 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 64,958.69 புள்ளிகளாவும், நிஃப்டி 19,411.75 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.47 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 84.71 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 116.00 அல்லது 1.70% குறைந்து ரூ.6,710 ஆக விற்பனையாகி வருகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் உள்ளது. சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.