பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 63,065 புள்ளிகளாக வர்த்தகம்..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 77.34 புள்ளிகள் சரிந்து 63,065 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,712 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
நேற்று 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை, இன்றைய வர்த்தக நாளில் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று 63,115 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 77.34 புள்ளிகள் அல்லது 0.12% என சரிந்து 63,065 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.
மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 3.45 புள்ளிகள் அல்லது 0.018% சரிந்து 18,712 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 63,143 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,716 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், நெஸ்லே இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.