பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 360 புள்ளிகள் குறைந்தது..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 360 புள்ளிகள் குறைந்து 57,339 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 16,988 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 57,773 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 360 புள்ளிகள் அல்லது 0.62% என குறைந்து 57,339 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 111.65 புள்ளிகள் அல்லது 0.65% குறைந்து 16,988 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி லிமிடெட், கோடக் மஹிந்திரா வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், விப்ரோ லிமிடெட், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, டெக் மஹிந்திரா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ஹிந்துஸ்தான் யூனிலீவர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஐடிசி லிமிடெட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், திவிஸ் லேபரட்டரீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பஜாஜ் ஃபின்சர்வ், அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ லிமிடெட், டாடா ஸ்டீல் லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்