பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 57 புள்ளிகள் குறைவு..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 57  புள்ளிகள் குறைந்து 60,990 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,913 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 60,990 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 57.84 புள்ளிகள் அல்லது 0.095% என குறைந்து 60,974 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 16.15 புள்ளிகள் அல்லது 0.090% குறைந்து 17,913 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,032 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,929 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி இந்தியா, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் & டூப்ரோ, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே இந்தியா ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், ஐஷர் மோட்டார்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் & டூப்ரோ, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்