பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 131 புள்ளிகள் குறைவு..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 131 புள்ளிகள் குறைந்து 61,188 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,001 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,990 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 131 புள்ளிகள் அல்லது 0.21% என குறைந்து 61,188 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 34.65 புள்ளிகள் அல்லது 0.19% குறைந்து 18,001 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,319 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,035 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன் & டூப்ரோ, என்டிபிசி லிமிடெட், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மாருதி சுசுகி இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
நெஸ்லே இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் லிமிடெட், கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன் & டூப்ரோ, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி லிமிடெட், கோல் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
நெஸ்லே இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ்இண்ட் வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் கம்பெனி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.