தேர்தல் கருத்துக்கணிப்பால் ஏற்றம் காணும் பங்குச்சந்தை!
தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பங்குசந்தை நிலவரம் ஏற்றம் கண்டுள்ளது. இம்முடிவுகளால் பங்குகளின் மதிப்பு ஒரே நிமிடத்தில், ரூ.3.2 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தற்போது மும்பை குறியீட்டெண் செஞ்செக்ஸ் 1.400 புள்ளிகள் உயர்ந்து 39.331 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டெண் நிஃப்டி 411 புள்ளிகள் உயர்ந்து, 11,819 புள்ளிகளாகவும் உள்ளது.