தங்கம் போல ஜெட் வேகத்தில் செல்லும் வெள்ளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலையை மிஞ்சும் அளவிற்கு வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை, நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனையாகிறது. ஆனால், தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலை மட்டும் தொடர் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (22-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.6,860, சவரன் ரூ.54,880-க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலை நேற்று ஒருகிராம் ரூ.99க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1.30 உயர்ந்து கிராம் ரூ.100.30-க்கும், கிலோவிற்கு ரூ.1300 உயர்ந்து ரூ.1,00,300-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை ரூ.10 ஆயிரம் கடந்திருப்பது 2ஆவது முறையாகும்.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (21-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,880க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,860க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.99க்கும், கிலோ வெள்ளி ரூ.2,000 குறைந்து ரூ.99,900க்கு விற்பனை விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.