அதிர்ச்சி : கச்சா எண்ணெய் ஒரு பேரல் 119 அமெரிக்க டாலர்களாக உயர்வு….!

Default Image

உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 119 டாலராக அதிகரித்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. இருப்பினும், ரஷ்யாவுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 119 டாலராக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்குப் பின் கச்சா எண்ணெய் விலை 119 டாலரை எட்டியுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல், இருந்து வந்த நிலையில், இனிமேல் பெட்ரோல், டீசல் விலை உயரலாம் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்