வரி விகித குறைப்புக்கு பின் பங்குகளின் மதிப்பு ரூ2.11 லட்சம் கோடி உயர்வு..!
இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.இதற்காக அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது.அதில் ஒன்றாக இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை ஒன்றை அறிவித்தார்.அதில் கார்ப்ரேட் நிறுவனகளுக்கு வரி விகிதத்தை 25.17% ஆக குறைத்து உள்ளது.
இந்த வரி விகித மாற்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது.இதனால் முதலீட்டாளர்கள் அதிகரிக்கவும் ,நன்மைக்காகவும் இந்த சலுகை அரசு அளித்து உள்ளது.இந்த அறிவிப்புக்கு பின் பங்குகளின் விலை அதிகரித்து உள்ளது.
மும்பையில் உள்ள பங்கு சந்தைகளின் மதிப்பு ரூ.1.408 கோடியில் இருந்து ரூ. 2.111 கோடியாக அதிகரித்து உள்ளது.பங்குகளின் மதிப்பு குறைந்தபட்சம் 5.7% வரை அதிகரித்து உள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 68 காசுகள் அதிகரித்து உள்ளது.தற்போது ரூ.70.68 ஆக உள்ளது.