பிரபல சீனா சிமெண்ட் நிறுவனமான தியான்ருய் குரூப் பங்குகள் 99% சரிவு.!

இன்றைய பங்குச்சந்தை (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தின் இறுதி 15 நிமிடங்களில் பிரபல சீன சிமென்ட் உற்பத்தியாளரான தியான்ருயின் பங்குகள் திடீரென 99% சரிந்தது. இது அதன் சந்தை மதிப்பீட்டில் சுமார் 18 பில்லியன் டாலர் நஷ்டமாகியதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தியான்ருய் குரூப் பங்குகள் கடும் சரிவை தொடர்ந்து, ஹாங்காங்கில் அந்நிறுவனத்தின் சிமென்ட் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. மத்திய ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் பங்குகள் 76% சரிவதற்கு முன், ஹாங்காங் பென்னி பங்கு Xinji Shaxi-ன் வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டது.
தியான்ருய் குரூப் 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க தனியார் பங்கு நிறுவனமான KKR இன் முதல் பிரதான சீனா முதலீடாக இருந்தது.