இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்றமடைந்திருந்தாலும், மற்ற அனைத்து நாட்களிலும் இறக்கத்தில் வர்த்தகமானது. இதனால் பல நிறுவனங்களின் பங்குகள் சரிவை நோக்கி சென்றது.
முந்தைய நாட்களை போலவே இன்றைய நாளின் வர்த்தகத்திலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 65,101.95 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 65.30 புள்ளிகள் குறைந்து, 64,910.67 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 6.30 புள்ளிகள் குறைந்து 19,437.20 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.
முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,975.61 புள்ளிகளாவும், நிஃப்டி 19,443.50 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.15 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 79.69 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 31.00 அல்லது 0.49% உயர்ந்து ரூ.6,305 ஆக விற்பனையாகி வருகிறது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 16 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (+2.50%), டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (+1.32%), இண்டஸ் இண்ட் வங்கி (+0.92%), மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (+0.81%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (+0.82%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
டெக் மஹிந்திரா லிமிடெட் (-0.98%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (-0.65%), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் (-0.62%), சன் பார்மசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் (-0.56%)
உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…