Categories: வணிகம்

ஐந்தாவது நாளாக சரிந்த சென்செக்ஸ்.! 2.15% வீழ்ச்சியில் மஹிந்திரா நிறுவன பங்குகள்.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில வாரங்களாக சரிவில் வர்த்தகமாகி வரும் இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, சென்செக்ஸ் 176.76 புள்ளிகள் சரிந்து 64,655.44 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. நிஃப்டி 45.85 புள்ளிகள் குறைந்து 19,352.10 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது.

இன்று காலை 64,756.11 புள்ளிகளாகத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் தற்போதைய நிலவரப்படி, 198.72 புள்ளிகள் குறைந்து, 64,633.48 புள்ளிகளாக வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 15.90 புள்ளிகள் குறைந்து 19,379.40 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.

முந்தைய வர்த்தகநாளில் சென்செக்ஸ் 64,832.20 புள்ளிகளாவும், நிஃப்டி 19,395.30 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.40 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 80.41 அமெரிக்க டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 27.00 அல்லது 0.42% குறைந்து ரூ.6,345 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் இருக்கக்கூடிய 30 நிறுவனங்களில் 11 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது. அதன்படி, என்டிபிசி லிமிடெட் (+0.90%), டெக் மஹிந்திரா லிமிடெட் (+0.71%), பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (+0.56%), ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் (+0.23%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க வகையில், நேற்று மஹிந்திரா நிறுவன பங்குகள் 4.43% ஆக இருந்தது. ஆனால் இன்றைய வர்த்தக நாளில் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் பங்குகள் 2.15% சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (-2.15%), டைட்டன் கம்பெனி லிமிடெட் (-0.90%), ஏசியன் பெயிண்ட்ஸ் லிமிடெட் (-0.91%), இன்ஃபோசிஸ் லிமிடெட் (-0.60%) உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

Published by
செந்தில்குமார்

Recent Posts

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…

19 minutes ago

பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?

பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…

49 minutes ago

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

8 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

10 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

10 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

11 hours ago