3வது வாரமாக சரிவில் அதானி பங்குகள்.! முக்கிய பத்திர விற்பனையை நிறுத்திய நிறுவனம்.?

Published by
மணிகண்டன்

பங்குசந்தையில் 3வது வாரமாக சரிவில் தொடங்கிய அதானி நிறுவன பங்குகள். இதன் காரனமாக முக்கிய பத்திர விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு குறிப்பில் அதானி குழுமம் முறைகேடாக நிதிகளை திரட்டுகிறது என்ற பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தது. இந்த ஆய்வறிக்கையினை அடுத்து அதானி குழும பங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இரண்டாவது வரமாக சரிந்த பங்குசந்தையானது, தற்போது இன்று வார சந்தையான முதல்நாளில் 3வது வாரமாக தொடர் சரிவை அதானி குழும பங்குகள் சந்தித்து வருகின்றன. அதானி குழுமத்திற்கு சொந்தமான அனைத்து 10 நிறுவன பங்குகளும் சரிந்தன. இதில் அதானி எண்டர்பிரைசஸ் மொத்தமாக 9.7 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு குறிப்பினால், 118 பில்லியன் அமெரிக்க டாலர் அதானி நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதானி நிறுவனம் இந்த ஆராய்ச்சி நிறுவன முடிவுகளை ஆரம்பம் முதல் மறுத்து வருகிறது. மேலும் அதானி குழும தலைவர் கெளதம் அதானி வீடியோ ஒன்றை வெளியிட்டும் இந்த மறுப்பு தகவல்கள் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.

இந்த அதானி குழும விவகாரம் இந்திய பாராளுமன்றம் அவை தொடர் வரை சென்றது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த மறுநாள் தொடர்ந்து இன்று தொடங்கிய கூட்டம் வரையில் அதானி நிறுவன விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையெழுத்து தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

தொடர் சரிவு காரணமாக , அதானி குழுமம் ஓர் முக்கிய பத்திர விற்பனையை நிறுத்தியுள்ளதாகவும் கடந்த சனிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.  அதானி குழுமத்திற்கு கடன் நிறைய இருப்பதாலேயே அந்நிறுவனம் இவ்வாறு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என ஒரு செய்தி நிறுவனம் கூறிய நிலையில், அதானி குழுமத்தின் மொத்தக் கடன் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டும் தான் இருக்கிறது என்று அதானி குழும தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

15 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

16 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

18 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

19 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

19 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

2 days ago