3வது வாரமாக சரிவில் அதானி பங்குகள்.! முக்கிய பத்திர விற்பனையை நிறுத்திய நிறுவனம்.?
பங்குசந்தையில் 3வது வாரமாக சரிவில் தொடங்கிய அதானி நிறுவன பங்குகள். இதன் காரனமாக முக்கிய பத்திர விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு குறிப்பில் அதானி குழுமம் முறைகேடாக நிதிகளை திரட்டுகிறது என்ற பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தது. இந்த ஆய்வறிக்கையினை அடுத்து அதானி குழும பங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இரண்டாவது வரமாக சரிந்த பங்குசந்தையானது, தற்போது இன்று வார சந்தையான முதல்நாளில் 3வது வாரமாக தொடர் சரிவை அதானி குழும பங்குகள் சந்தித்து வருகின்றன. அதானி குழுமத்திற்கு சொந்தமான அனைத்து 10 நிறுவன பங்குகளும் சரிந்தன. இதில் அதானி எண்டர்பிரைசஸ் மொத்தமாக 9.7 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வு குறிப்பினால், 118 பில்லியன் அமெரிக்க டாலர் அதானி நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதானி நிறுவனம் இந்த ஆராய்ச்சி நிறுவன முடிவுகளை ஆரம்பம் முதல் மறுத்து வருகிறது. மேலும் அதானி குழும தலைவர் கெளதம் அதானி வீடியோ ஒன்றை வெளியிட்டும் இந்த மறுப்பு தகவல்கள் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
இந்த அதானி குழும விவகாரம் இந்திய பாராளுமன்றம் அவை தொடர் வரை சென்றது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த மறுநாள் தொடர்ந்து இன்று தொடங்கிய கூட்டம் வரையில் அதானி நிறுவன விவகாரத்தை எதிர்க்கட்சியினர் கையெழுத்து தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
தொடர் சரிவு காரணமாக , அதானி குழுமம் ஓர் முக்கிய பத்திர விற்பனையை நிறுத்தியுள்ளதாகவும் கடந்த சனிக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமத்திற்கு கடன் நிறைய இருப்பதாலேயே அந்நிறுவனம் இவ்வாறு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என ஒரு செய்தி நிறுவனம் கூறிய நிலையில், அதானி குழுமத்தின் மொத்தக் கடன் சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர் மட்டும் தான் இருக்கிறது என்று அதானி குழும தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.