இந்திய பங்குச்சந்தை : வாரத்தின் முதல் நாளில் உச்சம் ..! முதலீட்டாளர்கள் ஹேப்பி ..!
பங்குச்சந்தை : கடந்த வாரத்தின் சற்று ஏற்றம் இறக்கம் கண்டு வந்த இந்திய பங்குசந்தையானது வார இறுதியான வெள்ளிக்கிழமை அன்று பெரும் உச்சத்தை எட்டியது. இதனால் முதலீட்டாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வந்தனர் அதனை தொடர்ந்து இன்று காலை முதல் 2 இந்திய பங்குச்சந்தை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக மும்பை பங்கு சந்தையான பிஎஸ்இ 345 புள்ளிகள் உயர்ந்து 81,676 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. அதே போல தேசிய பங்குசந்தையான நிஃப்ட்டி 84 புள்ளிகள் உயர்ந்து 24,922 புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. இப்படி உயர்வை தொடுவதற்கு முக்கிய காரணமாக முதலீட்டாளர்கள் என்றே கூறுகின்றனர்.
அதாவது, பட்ஜெட் தாக்கல் காரணமாக சரிவு நிலையில் இருந்த சென்செக்ஸ் மீண்டும் உயர்வை அடைவதற்கு முதலீட்டாளர்கள் மீண்டும் உலகப் பங்குச் சந்தைகளின் உயர்வு நிலை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளிலும் முதலீடு மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உச்சம் பெற்று வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மேலும், இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது எனவும் சிப்லா, ஐடிசி, ஏஷியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளது எனவும் சில தகவல் வெளியாகி உள்ளன.
பங்குச்சந்தை உயர்வினால் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது மாறாமல் இன்று ரூ.83.71 ஆக இருந்து வருகிறது. மேலும், வரும் காலங்களில் இந்திய பங்குச்சந்தையில் ஏற்றம் காணும் எனவும் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் அடைவார்கள் எனவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.