Sensex: பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவு! சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1,181 புள்ளிகள் உயர்ந்து 61,795 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,349 ஆகவும் வர்த்தகம் நிறைவு செய்யப்பட்டது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 1,181 புள்ளிகள் அல்லது 1.95% உயர்ந்து 61,795 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 321 புள்ளிகள் அல்லது 1.78% உயர்ந்து 18,349 ஆகவும் வர்த்தகம் நிறைவு செய்யப்படுகிறது.
முந்தைய நாள் வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,613 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,028 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.