SENSEX: பங்குச்சந்தை….சென்செக்ஸ் 780 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 784 புள்ளிகள் அதிகரித்து 61,838 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,279 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை, வர்த்தகத்தில் கடந்த வாரம் சரிவில் முடிவடைந்த நிலையில், இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 784 புள்ளிகள் அதிகரித்து 61,838 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 210 புள்ளிகள் அதிகரித்து 18,279 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வர்த்தக நிலவரப்படி பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 61,054 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,069 ஆகவும் வர்த்தகத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.