StockMarkets: கடும் சரிவில் பங்குச்சந்தை..! சென்செக்ஸ் 847 புள்ளிகள் குறைந்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 847 புள்ளிகள் குறைந்து 59,583 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,635 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இந்தியப் பங்குச்சந்தை, மூன்று நாட்களுக்கு பிறகு 60,385 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 847 புள்ளிகள் அல்லது 1.40 % என குறைந்து 59,583 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 192.95 புள்ளிகள் அல்லது 1.08% குறைந்து 17,635 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,431 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,828 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, நெஸ்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐடிசி லிமிடெட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், லார்சன் & டூப்ரோ, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி லிமிடெட், இண்டஸ்இண்ட் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ் லிமிடெட், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், லார்சன் & டூப்ரோ, ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், திவிஸ் லேபரட்டரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.