Categories: வணிகம்

வாரத்தின் மூன்றாம் நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.! 64,640 புள்ளிகளாக வர்த்தகம்.!

Published by
செந்தில்குமார்

இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, சென்செக்ஸ் 200 புள்ளிகள் முதல் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது நடைபெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு பங்குச்சந்தை நிறுத்திவைக்கப் பட்டிருந்தது. இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று 64,619 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 69.09 புள்ளிகள் உயர்ந்து 64,640.97 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 12.15 புள்ளிகள் உயர்ந்து 19,293.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. 

பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.050 டாலர் விலை குறைந்து 88.02 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 14.00 அல்லது 0.2% குறைந்து ரூ.6,960 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

52 seconds ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

9 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

11 hours ago

சைலண்டாக 2 போன்களை அறிமுகம் செய்த ஜியோ! அம்பானி போட்ட பாக்க பிளான்?

இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…

12 hours ago

ரிக்கி பாண்டிங், சேவாக்கை கழட்டிவிட்ட டெல்லி! பயிற்சியாளராக களமிறங்கும் ஹேமங் பதானி!

டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…

12 hours ago

அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து! சிலருக்கு காயமா? விளக்கம் கொடுத்த முதல்வர்!!

அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…

13 hours ago