வாரத்தின் மூன்றாம் நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.! 64,640 புள்ளிகளாக வர்த்தகம்.!
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, சென்செக்ஸ் 200 புள்ளிகள் முதல் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது நடைபெற்றது. நேற்று செவ்வாய்க்கிழமை விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு பங்குச்சந்தை நிறுத்திவைக்கப் பட்டிருந்தது. இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று 64,619 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 69.09 புள்ளிகள் உயர்ந்து 64,640.97 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 12.15 புள்ளிகள் உயர்ந்து 19,293.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.050 டாலர் விலை குறைந்து 88.02 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 14.00 அல்லது 0.2% குறைந்து ரூ.6,960 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.
இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.