இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த சில வாரம் முதலே சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. அந்த வகையில் கடந்த 17ம் தேதி மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 700 புள்ளிகள் வரை சரிந்தது. அதோடு தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி வர்த்தக நாளின் முடிவில் 231.90 புள்ளிகள் வரை சரிந்தது.
பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த பெரிய மாற்றத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்ற காரணங்களால் பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று 65,743 என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. அதன்படி, சென்செக்ஸ் 190.79 புள்ளிகள் உயர்ந்து 65,699.11 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல, என்எஸ்இ நிஃப்டி 63.55 புள்ளிகள் உயர்ந்து 19,587.10 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,508 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,523 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. இதற்கு முன்னால் 19 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகி வந்த நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…