Categories: வணிகம்

ஐந்தாவது நாளில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்.! 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு.!

Published by
செந்தில்குமார்

இந்த வாரத் தொடக்கம் முதல் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, மூன்று நாட்களாக சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. இது நேற்று 900 புள்ளிகளாக மாறியது. அதே போல நிஃப்டி 260 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது.

பங்குச்சந்தையின் சரிவினால் நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாரத்தின் ஐந்தாவது வர்த்தக நாளான இன்று யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றமடைந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

அதன்படி, ஐந்தாவது வர்த்தக நாளான இன்று 63,559 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 501.75 புள்ளிகள் உயர்ந்து 63,649.90 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 128.35 புள்ளிகள் உயர்ந்து 18,985.60 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாளில் 63,774 புள்ளிகள் எனத் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 900.91 புள்ளிகள் குறைந்து 63,148.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதோடு, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 264.90 புள்ளிகள் குறைந்து 18,857.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

மேலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.10 டாலர் விலை உயர்ந்து 89.03 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 94.00 அல்லது 1.35% உயர்ந்து ரூ.7,039 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!

டெல்லி : டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா நியமிக்கப்பட்டு அவரும் பொறுப்பேற்றுக்கொண்டார்.…

4 minutes ago

காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

54 minutes ago

நாதகவில் அடுத்த விக்கெட்டா? “நானே விரைவில் சொல்வேன்” – காளியம்மாள் விளக்கம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியில் (நாதக) சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

2 hours ago

ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கி மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அனைவருடைய கவனமும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

3 hours ago

மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி : புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி…

4 hours ago

நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன் என்பவர்…

4 hours ago