தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த சென்செக்ஸ் !!
பங்குச்சந்தை: தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் (BSE) இரண்டும் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளான இன்றைய நாளில் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
வர்த்தக நாளான இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் தற்போது 1,602.23 புள்ளிகள் உயர்ந்து 73,681.27 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதே போல தேசிய பங்குசந்தை குறியீடான நிஃப்ட்டி 494.15 உயர்ந்து 22,378.65 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்றைய நாளிலும் அதற்கு முந்தைய நாளிலும் இறக்கம் கண்டு வந்த நிஃப்டி புள்ளிகளும், சென்செக்ஸ் புள்ளிகளும் இன்றைய நாளில் சற்று உயர்ந்துள்ளதால் இந்த உயர்வானது கடந்த 2 நாட்களில் இறங்கிய புள்ளிகளையும் சேர்த்து இன்றைய நாளில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.