தொடர்ந்து உச்சத்தை தொடும் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு! இதுதான் காரணம்!

பங்குச்சந்தை : இந்திய பங்குச்சந்தையானது வாரத்தின் முதல் நாளான இன்று கலைக்கட்டியுள்ளது. ஆசிய பங்குச்சந்தைகளின் ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் பங்குகளும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது, மேலும் தேர்தல் முடிவுகளும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பங்குசந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும் நோக்கத்துடன் டன் ப்ளூ சிப் (TON Blue Chip) பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியுடுகள் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது மும்பை பங்குச்சந்தையின் (BSE) குறியீடான சென்செக்ஸ் இன்றைய நாளின் காலை பொழுது நடந்த வர்த்தகத்தில் 75,949.3 என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
தற்போது அது சில புள்ளிகள் உயர்ந்து 76,000 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி கொண்டு வருகிறது. அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை (NSE) குறியீடான நிஃப்டி 50 23,075.65 என்ற புதிய உச்சத்தைத் தொட்டதுடன் தற்போது 100 புள்ளிகள் உயர்ந்து 23,175.65 புள்ளிகளில் வர்த்தகமாகி கொண்டு வருகிறது.
சென்செக்ஸ் (BSE) குறியீட்டின் பட்டியலில் உள்ள நிறுவனங்களான டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், என்.டி.பிசி, ஹெச்.டி.எஃப்சி வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றின் பங்குகள் 1% சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் விப்ரோ, மாருதி, மஹிந்திரா&மஹிந்திரா, ரிலையன்ஸ், சன் பார்மா, ஆசியன் பெயின்ட்ஸ் மற்றும் பவர் கிரிட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவில் இருந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025