சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்.. முதலீட்டார்கள் முதலீடு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது!

Published by
பாலா கலியமூர்த்தி

சென்செக்ஸ், நிப்டி சாதனை உச்சத்தை எட்டியதால், முதலீட்டாளர்களின் முதலீடு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது.

இந்திய சந்தையில் பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு இன்று ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டிய பிறகு முதல் முறையாக ரூ.260 லட்சம் கோடியை தாண்டியது.

பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் முதலீடு மதிப்பு இன்று ரூ.260.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய அமர்வில் ரூ.259.68 லட்சம் கோடியாக இருந்தது. சென்செக்ஸ் 58,908 என்ற உச்சத்தை தொட்ட பிறகு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்தது. நிப்டி 17,576 என்ற சாதனை உச்சத்தை எட்டியது.

பிஎஸ்இ மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் முறையே 124 புள்ளிகள் மற்றும் 37 புள்ளிகள் உயர்ந்தன. நீண்ட காலமாக தற்காப்பு பங்காகக் கருதப்படும் ஐடிசி பங்கு 7.45% உயர்ந்து, ரூ.232.10 ஆக, சென்செக்ஸ் லாபத்தில் முதலிடத்தில் உள்ளது.

மற்ற சென்செக்ஸ் லபாகங்களில் இண்டஸ்இண்ட் வங்கி (8.55%), பஜாஜ் ஆட்டோ (1.34%) மற்றும் SBI (1.49%) ஆகவும் உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சென்செக்ஸ் 23.24% அல்லது 11,098 புள்ளிகளும், நிஃப்டி 25.58% அல்லது 3,576 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.

ஒரு வருடத்தில், சென்செக்ஸ் 49.72% அல்லது 19,541 புள்ளிகளை அதிகரித்துள்ளது. நிஃப்டி 51.29% அல்லது 5,952 புள்ளிகளின் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத சந்தை சரிவுக்குப் பிறகு முதலீட்டாளர்களின் லாபம் 155.54% அல்லது ரூ.158.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மார்ச் 23, 2020 அன்று, பிஎஸ்இ பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் இன்று ரூ.247.32 லட்சம் கோடியாக இருந்த ரூ.101.86 லட்சம் கோடியாக குறைந்தது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை மிக உயர்ந்த இழப்புகளை சந்தித்த பிறகு சந்தை மூலதனத்தின் வீழ்ச்சி ஏற்பட்டது.

சென்செக்ஸ் 3,934 புள்ளிகளை இழந்து 25,981 ஆகவும், நிப்டி 1,135 புள்ளிகள் குறைந்து 7,610 ஆகவும் முடிந்தது. கடந்த ஆண்டு மார்ச் 23 முதல், சென்செக்ஸ் 32,927 புள்ளிகள் அல்லது 126.73% அதிகரித்துள்ளது. இதேபோல், நிஃப்டி 130.95% அல்லது 9,966 புள்ளிகள் என்ற சாதனை உயர்வை அடைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீடு எண் 417.96 (0.71%) புள்ளிகள் உயர்ந்து, 59,141.16 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு 110.05 (0.63%) புள்ளிகள் உயர்ந்து, 17,629.50 புள்ளிகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

3 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

5 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

5 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

5 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

6 hours ago