பங்குச்சந்தை : நாடளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த சனிக்கிழமை (ஜூன்-1) அன்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அன்று மாலை செய்தி ஊடகங்களின் கருத்துக்கணிப்பும் வெளியானது. அதில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெரும் என்று வெளியான கருத்து கணிப்பில் தெரிய வந்தது.
இதனால், வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தையின் குறியீடுகளாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் பெற்று வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (மே-31) அன்று சென்செக்ஸ் (BSE) 75.71 புள்ளிகள் அதாவது 0.10% உயர்ந்து 73,961.31 ஆக முடிவடைந்து இருந்தது.
அதே போல நிஃப்டி (NSE) 42.05 அதாவது 0.19% உயர்ந்து 22,530.70 புள்ளியில் முடிந்து இருந்தது. தற்போது, வாரத்தின் முதல் நாளான இன்று பிஎஸ்சி சென்செக்ஸ் (BSE) 2,777.58 புள்ளிகள் (3.75%) உயர்ந்து 76,738.89 என்ற புள்ளிகள் எட்டி புதிய வரலாற்று சாதனையை தொட்டுள்ளது.
அதே போல மறுபக்கமும் என்எஸ்சி நிஃப்டி (NSE) 808 புள்ளிகள் (3.58%) உயர்ந்து 23,338.70 புள்ளிகள் எட்டி வரலாற்று சாதனையை தொட்டு 24,000-த்தை நெருங்கி வருகிறது. இதன் மூலம் பவர் கிரிட் (Power Grade), என்டிபிசி (NTPC), லார்சன் & டூப்ரோ, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் மஹிந்திரா&மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer)…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு…