Sensex: ஆண்டின் கடைசி வர்த்தக நாள்! சென்செக்ஸ் ஏறத்தாழ 300 புள்ளிகள் சரிவு.!
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 293 புள்ளிகள் குறைந்து 60,840 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,105 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
2022 ஆம் ஆண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 293 புள்ளிகள் அல்லது 0.48% என சரிந்து 60,840 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 85 புள்ளிகள் அல்லது 0.47% சரிந்து 18,105 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,133 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,191 ஆகவும் நிறைவடைந்தது.