வரலாறு காணாத சென்செக்ஸ் உயரம்.! 22,880ஐ தாண்டிய நிஃப்டி..!

Sensex, Nifty 50

சென்னை : பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று திடீரென மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸானது இன்று காலை முதல் உயர்ந்து வரும் நிலையில் சற்று முன் 600 புள்ளிகள் உயர்ந்து 74,881.11 என்று உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. அதே நேரத்தில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி50 1% சதவீதம் உயர்ந்து 22,806. 20 என்ற புள்ளிகள் பெற்று வரலாறு காணாத உச்சத்தை இன்று எட்டியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேசிய பங்குசந்தையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றமும் இறுக்கமும் குறிப்பாக அதீத இறக்கம் கண்டு வந்த பங்குச்சந்தையானது இன்றைய நாளில் இப்படி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இந்த உச்சமானது இதற்கு முன் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஒரே நாளில் இப்படி சென்செக்ஸ் 600 புள்ளிகளை தொட்டதாலும், 74ஆயிரத்தை கடந்தாலும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இதில் அதானி எண்டர்பிரைசஸ் (Adani Enterprises Ltd), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), எல்&டி (L&T Construction), அதானி போர்ட்ஸ் (Adani Boards) மற்றும் எம்&எம் (M &M) ஆகியவை நிஃப்டி 50-ல் முதல் ஐந்து இடங்களில் லாபம் எட்டிய நிறுவனங்களாக உள்ளன. அதே போல சன் பார்மா, பவர் கிரிட், ஹிண்டால்கோ, கோல் இந்தியா மற்றும் என்டிபிசி ஆகியவை அடுத்தடுத்த முன்னணிலை பட்டியலில் உள்ளன.

ஐடிசி (ITC), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (JSW Steels), என்டிபிசி பவர் கிரேட் (NTPC Power Grade) உள்ளிட்ட கம்பெனிகளும், அளவீட்டில் சிறிய அளவிலேயே குறைந்துள்ளதாகவும் மற்ற அனைத்து பங்குகளும் நன்கு உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதிப் பற்றாக்குறையின் குறைப்பு இன்று பங்குசந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க சாதகமான ஒரு காரணியாக (X-Factor) அமைந்துள்ளது என ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் வி.கே.விஜயகுமார் ராய்ட்டர் (Reuters) நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்