கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் குறியீடு 650 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 122.44 புள்ளிகள் உயர்ந்து 34,565.63 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், எண்ணெய் & எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை அதிகரித்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.50 புள்ளிகள் அதிகரித்து 10,655.50 புள்ளிகளாக உள்ளது.
ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல், சன் பார்மா, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட், ஐடிசி லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ், எஸ்பிஐ, இன்போசிஸ், என்.டி.பி.சி மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவன பங்குகள் விலை 1.40% வரை உயர்ந்திருந்தது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.21%, மற்றும் சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.24% உயர்ந்துள்ளபோது, ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.22% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை புதிய உச்சத்துடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…