கடும் வீழ்ச்சியில் சென்செக்ஸ்..! 897 புள்ளிகள் சரிந்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 897 புள்ளிகள் குறைந்து 58,237 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,154 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 59,033 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 897 புள்ளிகள் அல்லது 1.52% என குறைந்து 58,237 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 258.60 புள்ளிகள் அல்லது 1.49% குறைந்து 17,154 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டெக் மஹிந்திரா லிமிடெட் நிறுவனம் மட்டுமே லாபம் அடைந்துள்ளது.
இண்டஸ்இண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டெக் மஹிந்திரா லிமிடெட், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே லாபம் அடைந்துள்ளது.
இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஐஷர் மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ஃபோசிஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.