நான்காவது நாளில் வீழ்ந்த சென்செக்ஸ்.! 64 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிவு.!

sensex falls

இந்த வாரத் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தது. அதன்படி, நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. நிஃப்டி 150 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து இன்று 64,000 புள்ளிகளுக்கு கீழ் சென்று வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நான்காவது வர்த்தக நாளான இன்று 63,774 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 558.36 புள்ளிகள் குறைந்து 63,490.70 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. 

அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 181.85 புள்ளிகள் உயர்ந்து 18,940.30 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. முந்தைய  வர்த்தக நாளின் முடிவில், சென்செக்ஸ் 522.82 புள்ளிகள் சரிந்து 64,049.06 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிஃப்டி 159.60 புள்ளிகள் சரிந்து 19,122.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.25 டாலர் விலை குறைந்து 89.88 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 29.00 அல்லது 0.41% உயர்ந்து ரூ.7,107 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்