sensex down [Image Source : Equitypandit]
இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, கடந்த சில நாட்களாக சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அந்தவகையில் சென்ற இரண்டு வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகிவந்த பங்குச்சந்தை, இந்த வார வர்த்தக நாளிலும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை சரிவினால் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் ரூ.5 கோடிக்கும் மேல் இழந்துள்ளனர்.
தற்போது, மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலை நிலவரப்படி 63,829 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 145.55 புள்ளிகள் சரிந்து 63,729.38 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 22.50 புள்ளிகள் சரிந்து 19,057.10 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 237.72 புள்ளிகள் சரிந்து 63,874.93 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. மேலும், நிஃப்டி 61.30 புள்ளிகள் சரிந்து 19,079.60 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.0100 டாலர் விலை உயர்ந்து 87.42 டாலராக விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 8.00 அல்லது 0.12% சரிந்து ரூ.6,774 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன
இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக. சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…