நான்காவது நாளாக சரிவடைந்த சென்செக்ஸ்.! 300 புள்ளிகளுக்கு மேல் குறைவு.!

sensex falls

கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டிம், இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்களில் ஏற்றத்துடன் வர்த்தகமானது. ஆனால் மூன்றாவது நாளான புதன்கிழமை சரிவுடன் வர்த்தகமானது. ஏற்றமடையும் என்று முதலீட்டாளர்கள் நினைத்துக் கொண்டிருக்க, நான்காவது நாளாக இன்றும் பங்குச்சந்தை சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி, இன்றைய வர்த்தக நாளில் 65,484 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், 307.93 புள்ளிகள் சரிந்து 65,569.09 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. ஆனால், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 99.75 புள்ளிகள் உயர்ந்து 19,571.35 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாளில் 66,473.74 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 551.07 புள்ளிகள் சரிந்து 65,877.02 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 140.40 புள்ளிகள் சரிந்து 19,671.10 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இவ்வாறு பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.45 டாலர் விலை குறைந்து 91.05 டாலராக விற்பனையாகி வருகிறது.

மேலும், சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 24.00 அல்லது 0.33 சதவீதம் குறைந்து ரூ.7,341 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park