Categories: வணிகம்

ஐந்தாவது நாளாக சரிந்த சென்செக்ஸ்.! 65,397.62 புள்ளிகளாக நிறைவு.!

Published by
செந்தில்குமார்

கடந்த சில வாரங்களாக சரிவுடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்களில் ஏற்றத்துடன் வர்த்தகமானது. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கி வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இன்றைய வர்த்தக நாளில் பங்குச்சந்தை ஏற்றமடையும் என்று முதலீட்டாளர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் பங்குச்சந்தை சரிவுடனே வர்த்தகமானது. அதன்படி, இன்று 65,484 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ், வர்த்தக நாளின் முடிவில் 231.62 புள்ளிகள் சரிந்து 65,397.62 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. ஆனால், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 82.05 புள்ளிகள் உயர்ந்து 19,542.65 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

முந்தைய வர்த்தக நாளில் 65,484 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 247.78 புள்ளிகள் சரிந்து 65,629.24 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 46.40 புள்ளிகள் சரிந்து 19,624.70 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது.

இவ்வாறு பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைவதற்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணங்களாக கூறப்படுகிறது. தற்போது, பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.95 டாலர் விலை உயர்ந்து 93.33 டாலராக விற்பனையாகி வருகிறது.

மேலும், சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 108.00 அல்லது 1.47 சதவீதம் குறைந்து ரூ.7,438 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

11 minutes ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

15 minutes ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

40 minutes ago

என்னை மிஞ்சுவாருனு நினைச்சேன்..ஆனா…அஸ்வின் ஓய்வால் அதிர்ச்சியான அனில் கும்ப்ளே!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…

3 hours ago

அம்பேத்கரை இழிவுபடுத்திய கட்சி காங்கிரஸ்! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அம்பேத்கர்  பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…

3 hours ago

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

4 hours ago