Categories: வணிகம்

ஐந்தாவது நாளில் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ்.! 350 புள்ளிகளுக்கு மேல் சரிவு.!

Published by
செந்தில்குமார்

இந்த வாரத்தில் கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நான்காவது நாளான நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகியது. அதேபோல வாரத்தின் ஐந்தாவது நாளான இன்றும் கூட பங்குச்சந்தை குறியீடுகள் சரிவுடனே வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 66,034 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் 362.85 புள்ளிகள் சரிவடைந்து 66,045.54 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதேபோல, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 99.00 புள்ளிகள் சரிவடைந்து 19,695.00 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 66,408 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, நிஃப்டி 19,794 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தும், நிஃப்டி 231.90 புள்ளிகள் வரை சரிந்தும் வர்த்தகமாகி வந்தது.

இந்த பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு அமெரிக்காவில் கடன் வட்டி வீதங்கள், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் பங்குச்சந்தையில் லாபத்தைப் பதிவு செய்து முதலீட்டாளர்கள் பணத்தைப் பெறுவது போன்றவை காரணமாக அமைந்தது. இதற்கு முன்னால் நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அதிரடி வரி போட்ட டொனால்ட் டிரம்ப்! “கண்டிப்பா பதிலடி இருக்கு”… கனடா, ஐரோப்பியா திட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…

17 minutes ago

ஹிந்தி திரையுலகில் பெரும் சோகம்! நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் காலமானார்!

மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…

42 minutes ago

அப்போ சரியா செஞ்சேன் இப்போ இல்லை…ஜாகீர் கானுடன் புலம்பிய ரோஹித் சர்மா!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…

54 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை..இன்று இந்த 17 மாவட்டத்திற்கு அலர்ட்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…

2 hours ago

கடும் எதிர்ப்பு… மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்டத் திருத்த மசோதா!

புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

2 hours ago

லியோவை பார்க்கணுமா? பார்முக்கு திரும்பிய வெங்கடேஷ் ஐயர்..23.75 கோடி வேலை செய்யுது!

கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…

2 hours ago