வீழ்ச்சியடைந்தது சென்செக்ஸ்..! 377 புள்ளிகள் சரிவு..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 377 புள்ளிகள் குறைந்து 60,305 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,856 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 60,652 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 377 புள்ளிகள் அல்லது 0.62% என குறைந்து 60,305 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 114 புள்ளிகள் அல்லது 0.64% குறைந்து 17,741 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,682 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,856 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

டைட்டன் கம்பெனி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், லார்சன் & டூப்ரோ, என்டிபிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

டைட்டன் கம்பெனி, சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, பார்தி ஏர்டெல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ் & சிறப்புப் பொருளாதார மண்டலம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்