சென்செக்ஸ் மேலும் சரிவு, ஃபெட் டின் வட்டி உயர்வால் ரூபாயின் மதிப்பும் குறைந்தது

Default Image

(F&O) வின் வார காலாவதியால் சென்செக்ஸ் சரிந்து பங்குச் சந்தையில் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன.

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சிவப்பு நிறம் என்பது முந்தைய நாள் வர்த்தகத்தை விட விலை சரிந்து விற்கப்பட்டதைக் குறிக்கும். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளனர்.

இது ஃபெடரல் ஃபண்ட்டின் வட்டி விகிதத்தை 3% இலிருந்து 3.25% க்கு கொண்டு செல்கிறது. இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடியில் வட்டி விகிதம் இப்படி உயர்ந்து இருந்ததாகக் குறிப்பிடுகிறது. பிஎஸ்இ சென்செக்ஸ் 480 புள்ளிகள் சரிந்து 58976 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 140 புள்ளிகள் சரிந்து 17577 ஆகவும் இருந்தது.

ஐடிசி(ITC), பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, என்டிபிசி(NTPC), கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே இந்தியா மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை சென்செக்ஸில் அதிக லாபம் பெற்றவைகளாகவும், எச்டிஎஃப்சி(HDFC), விப்ரோ, டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டியின் எச்.சி.எல்(HCL Tech) டெக், சன் பார்மா ஆகியவை சென்செக்ஸ் நஷ்டத்தில் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கி(FED) யின் வட்டி உயர்வால் டாலர், குறியீட்டு எண் 111 நிலைகளுக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு குறைந்துள்ளது, மற்றும் பிற ஆசிய நாணயங்களின் மதிப்பும் குறைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்