உச்சம் பெற்று சாதனை படைத்தும் ..லாபத்தை ஈட்ட தவறிய சென்செக்ஸ்!

Sensex Result Today

சென்செக்ஸ் : பங்குசந்தை வரலாற்றில் புள்ளிகள் இதுவரை காணாத உச்சம் பெற்றதோடு நாளின் முடிவில் லாபத்தை எட்டவும் தவறி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பரபரப்புகள் சற்று தணிந்து இருக்கும் நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக சென்செக்ஸ் புள்ளிகள் உச்சம் பெற்றுள்ளது. ஆனாலும் தேர்தல் ரிசல்ட் வரும் வரையிலும் பங்குசந்தையின் போக்கு என்பது அதிக ஏற்ற, இறக்கத்துடந்தான் இருக்கும் என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

மேலும், வெகு நாட்களுக்கு பிறகு நேற்றைய நாளில் நிஃப்டி 50 1% சதவீதம் அதிகரித்து புதிய உச்சமான 22,806. 20 புள்ளிகள் கடந்த நிலையில் அது இன்றைய நாளின் பரிவர்த்தனையில் மீண்டும் உச்சம் கண்டு 23,000த்தை கடந்து தற்போது 24,000த்தை நோக்கி நகர்ந்து வருகின்றது. இது விரைவில் 24,000த்தை தொட்டு விடும் என்று ஒரு சில முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

வர்த்தக நேரம் முடிவில் மும்பை சென்செக்ஸானது 8 புள்ளிகள் குறைந்து 75,410 புள்ளிகளில் நிறைவு பெற்றது. வர்த்தகம் இடையே 59 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்தபோதும் கடைசியில் 8 புள்ளிகள் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 23,026 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை.

இன்றைய நாளின் வர்த்தக நேரம் முடிவில் நிஃப்டி 11 புள்ளிகள் குறைந்து 22,957 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இதனால் மிகுந்த லாபம் ஈட்டவும் தவறி இருக்கிறது. நிஃப்டி 50 குறியீட்டில் 17 பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடிவடைந்தன, HDFC வங்கி, பார்தி ஏர்டெல், பிபிசிஎல் (BPCL), எல்&டி(L&T) மற்றும் அல்ட்ரா டேக் சிமெண்ட் (UltraTech Cement) ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

ஆனால் அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, மஹிந்திரா&மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் டைட்டன் பங்குகள் நிஃப்டி 50 குறியீட்டில் அதிக சரிவை பதிவு செய்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்