2023 பட்ஜெட்டின் எதிரொலி..! சென்செக்ஸ் 506 புள்ளிகள் உயர்வு..!
2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக சென்செக்ஸ் 506 புள்ளிகள் உயர்ந்து 60,056-ஐ எட்டியது.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக 371 புள்ளிகள் என இருந்த சென்செக்ஸ் தற்பொழுது 506 என உயர்ந்து 60,056 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.
தற்பொழுது மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 506 புள்ளிகள் அல்லது 0.85% என உயர்ந்து 60,056 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 139 புள்ளிகள் அல்லது 0.79% உயர்ந்து 17,801 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,549 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,662 ஆகவும் நிறைவடைந்தது.